தங்க நகைகளுடன் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் குவியும் இலங்கையர்கள்
உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பலர் அதிக விலைகளை பயன்படுத்திக்கொள்ள அடகுக்கடைகளில் உள்ள தங்க பொருட்களை விற்க தூண்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சிலர் தங்க நகைகளை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அதிகளவு அடகுவைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள தங்க விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

இதன் காரணமாக அதிக விலைகளைப் பயன்படுத்திக்கொள்ள, பலர் தங்கள் வீடுகள், வங்கி பெட்டகங்கள் மற்றும் அடகுக் கடைகளில் இருந்த தங்கப் பொருட்களை விற்கத் தூண்டப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக, நாட்டின் சந்தையில் தங்கத்தின் புழக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியம் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, வட்டி விகிதங்கள் அதிகரிப்பு மற்றும் தங்க விலை உயர்வின் காரணமாக அடகு வைக்கப்பட்ட தங்கத்தை மீட்டெடுக்க முடியாத நிலையில், அவற்றில் மேலதிக பணத்தை பெற தூண்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றது.
ஈரான் - அமெரிக்க போரில் புதிய திருப்பம்! போர்க்களத்தில் இறங்கப்போகும் உக்ரைன் ரோபோக்கள் (காணொளி) News Lankasri