அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை!
ஜனாதிபதி பொதுமன்னிப்பை பயன்படுத்தி சிறைக்கைதியொருவரை மோசடியாக விடுவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வெசாக் தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை முறைகேடான வகையில் பயன்படுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்த கைதியொருவரை மோசடியான முறையில் விடுவித்த குற்றச்சாட்டில் அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
இதற்கான உத்தரவை அனுராதபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் (23) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகரை தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri