ஜோன்ஸ்டனுக்கு எதிரான ச.தொ.ச. வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு(Johnston Fernando) எதிரான ச. தொ.ச. நிறுவன மோசடி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சராக பணியாற்றிய காலத்தில் அவரின் கீழ் செயற்பட்ட ச.தொ.ச ஊழியர்களை மோசடியான முறையில் அரசியல் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்திக் கொண்டதாக குற்றம் சாட்டி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விசாரணை
குறித்த வழக்கு நேற்றைய தினம்(23) கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் போது ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அமைச்சராக இருந்த காலத்தில் அவரது ஒருங்கிணைப்பு அதிகாரியாக பணியாற்றிய விஜேரத்ன என்பவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் பின்னர் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஜுலை மாதம் 30ம் திகதி வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



