தெற்காசியாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்து அமெரிக்கா கவலை
தெற்காசியாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
அத்தோடு, பங்களாதேஷில் அடுத்து அமையவிருக்கும் அரசாங்கத்திற்கு சீன ஆயுதங்களுக்கு மாற்றாக அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக டாக்காவுக்கான வொஷிங்டன் தூதுவர் பிரெண்ட் டி. கிறிஸ்டென்சன் தெரிவித்துள்ளார்.
2024 ஓகஸ்டில் நிகழ்ந்த 'ஜென்-இசட்' (Gen Z) போராட்டத்தைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா பதவி விலகிய பிறகு, அங்கு இந்தியாவின் செல்வாக்கு குறைந்து சீனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இக்கூற்று முக்கியத்துவம் பெறுகிறது.
பங்களாதேஷ் பேச்சுவார்த்தை
சமீபத்தில் பங்களாதேஷ் எல்லையில் சீனா ஒரு ட்ரோன் தொழிற்சாலையை நிறுவ ஒப்பந்தம் செய்துள்ளதும், பாகிஸ்தானிடமிருந்து ஜே.எஃப்-17 (JF-17) போர் விமானங்களை வாங்க பங்களாதேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
பாதுகாப்பு உறவுகள் மட்டுமன்றி, வணிக ரீதியான தூதரக உறவுகளுக்கும் அமெரிக்கா முன்னுரிமை அளிப்பதாக கிறிஸ்டென்சன் கூறியுள்ளார்.

பங்களாதேஷில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாகவும், வரவிருக்கும் புதிய அரசு வணிகத்திற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், 1.2 மில்லியன் ரோஹிங்கியா அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி வழங்குவதில் அமெரிக்காவே முதன்மையான நாடாகத் திகழ்கிறது.
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் வெளிபாடா யாழ் சிறுவனின் படுகொலை...! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி
பொதுத்தேர்தல்
2026ஆம் ஆண்டு பெப்ரவரி 12 அன்று நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பங்களாதேஷ் மக்கள் யாரைத் தேர்ந்தெடுத்தாலும், அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக வொஷிங்டன் தெரிவித்துள்ளது.
ரோஹிங்கியா அகதிகளுக்கான மனிதாபிமான உதவிகளில் அமெரிக்கா சுமார் $300.6 மில்லியன் (54.9%) பங்களிப்பை வழங்கி மிகப்பெரிய நன்கொடையாளராக உள்ளது.

பங்களாதேஷின் மக்கள் தொகை சுமார் 175 மில்லியன் ஆகும். அமெரிக்கா தற்போது அந்நாட்டின் இறக்குமதிப் பொருட்களுக்கு 19% என்ற குறைக்கப்பட்ட பரஸ்பர வரி விகிதத்தை நிர்ணயிக்க முன்வந்துள்ளது.
எரிசக்தித் துறையில் அடுத்த 15 ஆண்டுகளில் சுமார் $15 பில்லியன் மதிப்பிலான வணிக ஒப்பந்தங்களுக்குத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.