ட்ரம்பின் அறிவிப்பை தொடர்ந்து எரிபொருள் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
ஈரான் - இஸ்ரேலுக்கு இடையிலான போர் நிறுத்த அறிவிப்பை டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டதை தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 4 சதவீதம் குறைந்துள்ளது.
உலகளாவிய சந்தையின் கணிப்பின் படி, பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 4 சதவீதம் குறைந்து, 68 டொலர் விலை வரம்பை எட்டியுள்ளது.
விலைக்குறைவு
கடந்த திங்கட்கிழமை, பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 7சதவீதமாக குறைந்திருந்த நிலையில் தற்போது மேலதிகமாக 4 சதவீதம் குறைந்துள்ளது.
இந்த விலை மாற்றம், கடந்த ஜூன் 12 ஆம் திகதி இஸ்ரேல் முதன்முதலில் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கிய போது இருந்ததை விட மொத்தமாக 11 சதவீத சரிவை கண்டுள்ளது.
ஜப்பான், தென் கொரியா மற்றும் அவுஸ்திரேலியாவின் முக்கிய விலைக்குறியீடுகள் அனைத்தும் உயர்ந்து வருவதால், மத்திய கிழக்கின் அண்மைய முன்னேற்றங்களுக்கு ஆசியாவின் பங்குச் சந்தைகளும் சாதகமாக பதிலளிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri
