இந்தியாவை 10 விக்கட்டுக்களால் தோற்கடித்த அவுஸ்திரேலிய அணி
சுற்றுலா இந்திய (India ) அணிக்கும் அவுஸ்திரேலிய (Australia ) அணிக்கும் இடையிலான போர்டர்-கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
பகல் இரவு போட்டியாக இடம்பெற்ற இந்த இரண்டாவது டெஸ்ட்டில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி தமது முதன் இன்னிங்ஸில் 180 ஓட்டங்களை பெற்றது.
அனைத்து விக்கட்டுக்களும் இழப்பு
இதற்கு பதிலளித்த அவுஸ்திரேலிய அணி, 337 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் ட்ராவிஸ் ஹெட் 140 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி, அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 175 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதன்படி அவுஸ்திரேலிய அணிக்கு போட்டியில் வெற்றி பெற 19 ஓட்டங்கள் மாத்திரமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது,
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்
இந்த இலக்கை அவுஸ்திரேலிய அணி, 3.2 ஓவர்களில் விக்கட்டுக்கள் எதனையும் இழக்காது பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.
இதன்படி 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய- அவுஸ்திரேலிய அணிக்கு 1க்கு1 என்ற சமநிலை வெற்றியை பகிர்ந்துள்ளன.
ஏற்கனவே இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |