நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் வலுவான நிலையில் இங்கிலாந்து
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவின்போது, இங்கிலாந்து அணி வலுவான நிலையில் துடுப்பாடிவருகிறது.
முன்னதாக இங்கிலாந்து அணி, தமது முதல் இன்னிங்ஸில் 280 ஓட்டங்களை பெற்றது.
இதன்படி பதிலுக்கு துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, 125 ஓட்டங்களுக்குள் தமது அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸ்
இந்தநிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவின்போது, 5 விக்கட்டுக்களை இழந்து 378 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன் அடிப்படையில் அந்த அணி தற்போது 533 ஓட்டங்களால் முன்னிலைப் பெற்றுள்ளது.
ஏற்கனவே இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |