இந்தியாவிற்கு பெரும் சவாலாக மாறியுள்ள அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள்
சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவின்போது இந்திய அணி இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதன்போது இந்திய அணி 5 விக்கட்டுக்களை இழந்து 128 ஒட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
இதன் காரணமாக, எஞ்சியுள்ள 5 விக்கட்டுக்களைக் கொண்டு, அவுஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களை அடைவதற்கு இன்னும் 29 ஓட்டங்களை இந்திய அணி பெறவேண்டியுள்ளது.
அவுஸ்திரேலிய அணி
அதற்கு பின்னரே, அவுஸ்திரேலிய அணிக்கு இரண்டாம் இன்னிங்ஸ்க்கான ஓட்ட இலக்கை நிர்ணயிக்கும் நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.
எனவே இந்தப்போட்டியை பொறுத்தவரை அவுஸ்திரேலிய அணிக்கே வெற்றிக்கான அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 180 ஓட்டங்களை பெற்றது இதில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் தமது பொறுப்புள்ள பங்கை வகிக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று இரண்டாவது இன்னிங்ஸிலும் இருவரும் தமது பொறுப்புக்களை தவறவிட்டுள்ளனர்.
இந்தநிலையில் அவுஸ்திரேலிய தமது முதல் இன்னிங்ஸில் சிறப்பாக துடுப்பாடி, 337 ஓட்டங்களை பெற்றது இதில் ட்ராவிஸ் ஹெட் 140 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |