அமெரிக்க பசுபிக் கடற்படை தளபதி அட்மிரல் ஸ்டீபன் கோஹ்லரை சந்தித்த அருண் ஹேமச்சந்திர

Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government Cyclone Ditwah
By Rakesh Feb 21, 2026 07:10 AM GMT
Report

இலங்கைக்கான தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று(20.02.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டனில் கோர விபத்து: இருவர் வைத்தியசாலையில்..

ஹட்டனில் கோர விபத்து: இருவர் வைத்தியசாலையில்..

விசேட சந்திப்பு

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மற்றும் அண்மைக்கால பாதுகாப்பு அபிவிருத்திகள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக மீளாய்வு செய்துள்ளனர்.

அமெரிக்க பசுபிக் கடற்படை தளபதி அட்மிரல் ஸ்டீபன் கோஹ்லரை சந்தித்த அருண் ஹேமச்சந்திர | Arun Hemachandra Meets Us Pacific Fleet Commander

அதிலும் குறிப்பாக, 'டிட்வா' சூறாவளி அனர்த்தத்தின் போது அமெரிக்கா வழங்கிய உடனடி மனிதாபிமான உதவிகளைப் பிரதி அமைச்சர் இதன்போது வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அமெரிக்க விமானப்படையின் 36-வது அவசரக்கால பதிலளிப்பு குழுவின் ஊடாக, இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்கள் மற்றும் விமானப்படை வீரர்களைப் பயன்படுத்தி வழங்கப்பட்ட வான்வழிப் போக்குவரத்து வசதிகள், இலங்கையின் மீட்புப் பணிகளுக்குப் பெரும் பக்க பலமாக அமைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கையை வலுப்படுத்த திட்டம்

இத்தகைய அவசர நிலைகளை ஒரு திருப்புமுனையாகக் கொண்டு, சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து நாட்டை மீண்டும் சிறப்பாகக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க பசுபிக் கடற்படை தளபதி அட்மிரல் ஸ்டீபன் கோஹ்லரை சந்தித்த அருண் ஹேமச்சந்திர | Arun Hemachandra Meets Us Pacific Fleet Commander

கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக அமெரிக்கா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்குப் பிரதி அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, அமெரிக்காவினால் வழங்கப்பட்ட நான்கு கடலோர பாதுகாப்பு கப்பல்கள், பீச்கிராப்ட் கிங் எயார் விமானம், அதிநவீன 'பிளீட் பிராட்பேண்ட்' (FleetBroadband) செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு மற்றும் 10 பெல் TH-57 பயிற்சி ஹெலிகள் ஆகியவற்றின் பங்களிப்பை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

அட்மிரல் கோஹ்லர் பதில்

இதற்குப் பதிலளித்த அட்மிரல் கோஹ்லர், இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நான்காவது கடலோர பாதுகாப்பு கப்பல் இன்று(21) சனிக்கிழமை அமெரிக்காவிலிருந்து இலங்கையை நோக்கிப் புறப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பசுபிக் கடற்படை தளபதி அட்மிரல் ஸ்டீபன் கோஹ்லரை சந்தித்த அருண் ஹேமச்சந்திர | Arun Hemachandra Meets Us Pacific Fleet Commander

இறுதியாக, இந்தோ -பசுபிக் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் அதன் சவால்களை எதிர்கொள்ளும் போது, நாடுகளின் இறையாண்மையை மதிப்பதே மிக முக்கியமானது என்பது குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட அட்மிரல் கோஹ்லர், கடந்த 2024 ஏப்ரல் 4 அன்று அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதியாகப் பொறுப்பேற்றார்.

இதற்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச இராணுவ நடவடிக்கைகளில் அவர் தலைமைத்துவம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலவும் சீரற்ற காலநிலை: மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்வு - மூடப்பட்டுள்ள வீதி குறித்து வெளியான தகவல்

நிலவும் சீரற்ற காலநிலை: மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்வு - மூடப்பட்டுள்ள வீதி குறித்து வெளியான தகவல்

அரசாங்க தொழிலுக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு

அரசாங்க தொழிலுக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US