காலியில் 7 இலட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியுடைய போதை மாத்திரைகளைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் காலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நேற்று கொஸ்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊரகஸ்மங்ஹந்திய, யுத்தபிட்டிய விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வைத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் சிக்கியுள்ளார். கைது செய்யப்பட்டவர் ஊரகஸ்மங்ஹந்திய, கைலத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சந்தேகநபரிடமிருந்து 1,340 போதை மாத்திரைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை ஊரகஸ்மங்ஹந்தியிலிருந்து கொஸ்கொட நோக்கி விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டவை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் ஒரு போதை மாத்திரையை 500 ரூபா என்ற விலையில் விற்பனை செய்து வந்துள்ளார். இதற்கமைய, கைப்பற்றப்பட்ட மொத்த மாத்திரைகளின் பெறுமதி சுமார் 6 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா (கிட்டத்தட்ட 7 இலட்சம்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளைக் கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan