தீவிரமடையும் போர் பதற்றம்! என்றுமில்லாதவாறு இலங்கையில் உருவான எரிபொருள் வரிசை

Ampara Sri Lanka Fuel Crisis Middle East Iran-Israel War
By Farook Sihan Feb 28, 2026 12:05 PM GMT
Report

மத்தியக் கிழக்கில் தற்போது மூண்டுள்ள போர்ப்பதற்றம் காரணமாக, இலங்கையில் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நிற்க  ஆரம்பித்துள்ளனர். 

பாரசீக வளைகுடாவில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் அம்பாறை மாவட்டத்தில் பெட்ரோல்  நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெட்ரோல்  நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர்.

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்.. உச்சகட்ட பதற்றநிலையில் மத்திய கிழக்கு

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்.. உச்சகட்ட பதற்றநிலையில் மத்திய கிழக்கு

என்றுமில்லாத மிக நீண்ட வரிசை

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை,பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை, ,நிந்தவூர், உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான நிலைமை தொடர்கின்றது. இதே வேளை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடும் நெரிசல் தற்போது ஏற்பட்டு வருகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கட்டுப்பாடுகளுடன் எரிபொருட்கள் வழங்கப்பட்டு வருவதுடன் சில இடங்களில் இல்லை என்ற வாசகத்தினால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மேலும் பொலிஸார் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் வரிசையில் நிற்கும் போது போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தீவிரமடையும் போர் பதற்றம்! என்றுமில்லாதவாறு இலங்கையில் உருவான எரிபொருள் வரிசை | Middle East War Sri Lanka Fuel Iran Usa War

தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக என்றுமில்லாதளவில் நீண்ட வரிசைகளில் மக்கள் முண்டியடிக்க ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட சமயங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நின்ற வரிசைகளை விட தற்போதே நீளமான வரிசைகளில் மக்கள் நிற்பதை அவதானிக்க முடிகிறது.

மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ வாகனங்களையே அதிகமாக பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காணப்பட்டது. இதேநேரம் டீசலை பெற்றுக்கொள்ளும் பொருட்டும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் காத்திருந்தன. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

ஈரான் மீதான இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்! பல மாதங்களாக குறிவைத்து தீட்டப்பட்ட இரகசிய திட்டம்

ஈரான் மீதான இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்! பல மாதங்களாக குறிவைத்து தீட்டப்பட்ட இரகசிய திட்டம்

திடீர் தாக்குதலால் ஏற்பட்ட பதற்றம்.. அவசர அவசரமாக மூடப்படும் வான்பரப்புக்கள்

திடீர் தாக்குதலால் ஏற்பட்ட பதற்றம்.. அவசர அவசரமாக மூடப்படும் வான்பரப்புக்கள்

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US