மன அழுத்தமா.. அரசியல் அழுத்தமா.. சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து எழும் சந்தேகங்கள்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் திடீர் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அவரின் உயிரிழப்பு தொடர்பில் முதலில் சில தென்னிலங்கை ஊடகங்களில், அவர் உயிர் மாய்த்துக் கொண்டுள்ளார் என செய்திகள் வெளியாகின.
இதனை தொடர்ந்து பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை அறிவிக்கப்பட்டதுடன் உயிர்மாய்ப்பாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டது.
இவ்வாறிருக்கையில், சி.டி. விக்ரமரத்ன நேற்று காலையில், உடற்பயிற்சிக்கு தயாராகி இருந்த நிலையில் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
எனவே, சாதாரணமாக தனது நாளை ஆரம்பித்த அவர், ஏன் உயிர்மாய்த்துக் கொள்ள வேண்டும் என இங்கு சந்தேகம் எழுகின்றது.
அதேநேரம், அவர், தான் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற தருணம், தனது துப்பாக்கியை ஒப்படைத்துள்ளார். இருப்பினும் அவர் தனது மெய்காவலரிடம் இருந்து துப்பாக்கியை பெற்று சுட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,
கிளிநொச்சி அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலை.. ஜனாதிபதி மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan