தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பியபோது கைதான கிருஷ்ணகுமாருக்கு விடுதலை
புதிய இணைப்பு
தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய வேளையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட கந்தசாமி கிருஷ்ணகுமாரை விடுதலை செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணைகளுக்காக இன்று (29.10.2026) யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட அவர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போதே அவரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாசியப்பிட்டி, அம்மன் கோவிலடியைச் சேர்ந்த கந்தசாமி கிருஷ்ணகுமார் (வயது 50) என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவராவார்.

கடந்த 26ஆம் திகதி தமிழகத்திலிருந்து விமானம் மூலம் இலங்கை திரும்பியபோது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் கடந்த 2015ஆம் ஆண்டு தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தார்.
பின்னர் திருச்சி சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், அண்மையில் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தாயகம் திரும்பியிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட அவர் சொந்தப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 12.11.2026 அன்று அவரை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது


மேலதிக தகவல் - தீபன்
முதலாம் இணைப்பு
தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய வேளையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நபர், வழக்கு விசாரணைகளுக்காக இன்று (29.10.2026) யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
யாழ்ப்பாணம் - மாசியப்பிட்டி, அம்மன் கோவிலடியைச் சேர்ந்த கந்தசாமி கிருஷ்ணகுமார் (வயது 50) என்பவரே இவ்வாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கைது நடவடிக்கை
இவர் கடந்த 26ஆம் திகதி தமிழகத்தில் இருந்து விமானம் மூலம் இலங்கை திரும்பிய போதே, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கிருஷ்ணகுமார் கடந்த 2015ஆம் ஆண்டு தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு, 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தார்.
சிறப்பு முகாமில் தடுத்து வைப்பு
அதன் பின்னர் திருச்சி சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், அண்மையில் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையிலேயே தற்போது தாய்நாடு திரும்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri
பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியா இது, சமூக வலைதளங்களில் வலம்வரும் லேட்டஸ்ட் போட்டோ... எப்படி ஆகிட்டார் பாருங்க Cineulagam