நாமலை பொறிக்குள் சிக்க வைத்துள்ள ஜோன்ஸ்டன்! நிலைகுலையும் ராஜபக்ச சாம்ராஜ்யம்
இலங்கையில் கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற நிதி மற்றும் ஏனைய குற்றங்கள் தொடர்பாக சமகால அரசாங்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது அரசியல் பழிவாங்கல் என குற்றம் சுமத்திய பலருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ செயற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதியின் போது செலுத்த வேண்டிய இறக்குமதி வரிகளைச் செலுத்தாமல் பெறப்பட்ட சொகுசு வாகனம் ஒன்றை வைத்திருந்தமை தொடர்பில் நேற்று நீதிமன்றத்தில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
நாமலுக்கு சிக்கல்
அவர் இவ்வாறு குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை விளக்கமறியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வரும் நாமல் ராஜபக்ச, தான் மகிந்த ராஜபக்சவின் மகன் என்பதனாலேயே அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகியிருப்பதாக குறிப்பிட்டார்.
தனது ஆட்சியின் கீழ் சம்பந்தப்பட்ட நபர்களுக்குத் தண்டனை வழங்குவதாகவும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாமல் தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணை
கடந்த காலத்தில் நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்கு பின்னால் மறைந்து இவ்வாறான வார்த்தைகளை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் தொடர்ந்து கூறி வந்திருந்தார்.

இவ்வாறான நிலையில் குறித்த குற்றங்கள் தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் தான் தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டதால் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரான ஏ. எச். எம். பௌசியும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின்படி மன்னிப்பு கேட்பதற்காக செய்தித்தாள்களில் பகிரங்க விளம்பரங்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ராஜபக்சக்களுக்கு நெருக்கமான நபர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்கள் - பெண்ணின் வாக்குமூலத்தில் கசியவுள்ள இரகசியங்கள்
you may like this video