ஹரக் கட்டாவின் பிணை மனுவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பிரபல பாதாள உலகக் குழு தலைவர் ஹரக் கட்டா எனப்படம் நதுன் சிந்தக்க வின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஹரக் கட்டா மற்றும் அவரது இரு சகாக்கள் தாக்கல் செய்த பிணை மனுக்களை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(29.10.2026) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பொழுதே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிணை மனு நிராகரிப்பு
அத்துடன், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு பிரதிவாதிகளை விடுவிக்குமாறு அவர்களின் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வழக்கின் தற்போதைய கட்டத்தில் இந்த பிணை மனுக்களை பரிசீலிக்க முடியாது என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த உத்தரவொன்றுக்கு எதிராக சட்டமா அதிபரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய, குறித்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில், பிணை மனுக்கள் மற்றும் விடுவிப்பு கோரிக்கைகளை பரிசீலிக்க முடியாது என தெரிவித்து மேல் நீதிமன்றம் அவற்றை நிராகரித்துள்ளது.
சந்தேகநபரான “ஹரக் கட்டா” தற்போது வெலிசர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கத்தின் புதிய சட்டமூலங்கள்: கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்