இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்: இராணுவ மேஜர் உட்பட்ட அதிகாரிகள் கைது
இலங்கையில் அண்மையில் பதிவான குற்றங்கள் தொடர்பாக ஒரு இராணுவ மேஜர், ஆறு அதிகாரிகள், ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 15 பேர் கைது செய்யப்பட்டதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றின் நேற்றைய(21.01.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“2024 செப்டம்பர் 23 முதல் நடந்த குற்றங்களை ஆராயும் போது, கடமைகளில் இருந்த சில இராணுவ வீரர்கள் இந்த சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆயுதங்கள் மீட்பு
கடந்த இரண்டு நாட்களில், ஒரு இராணுவ மேஜர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இராணுவத்தைச் சேர்ந்த மேலும் ஆறு உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதோடு ஒரு சிவில் பாதுகாப்பு அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்தக் கைதுகளுக்கு மேலதிகமாக, தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |