புதிய சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல்களுக்கு எதிராக 9 மாதங்களில் 75 வழக்குகள் தாக்கல்
புதிதாக இயற்றப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், கடந்த ஒன்பது மாதங்களுக்குள் சுமார் 75 நீதிமன்ற வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம் அறிவித்துள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டம் 2023 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில், குறித்த சட்டத்தின் கீழ், 2024 மார்ச் 26 முதல் 2024 டிசம்பர் 31 வரையிலான காலக் கட்டத்தில், இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம் தெரிவித்துள்ளது.
ஆணையகத்துக்கு முறையிடலாம்
இந்தப் புதிய சட்டத்தின் கீழ், ஒருவர் பணியில் இருந்தாலோ, இல்லாவிட்டாலோ, குற்றம் செய்தவர் தொடர்பான தகவல்களை, ஆணையகத்துக்கு எவரும் முறையிடலாம்.

இந்த முறையிடல் வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ அல்லது மின்னணு தொடர்பு மூலமாகவோ ஆணையகத்துக்கு தெரிவிக்கப்படலாம்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam