மீண்டும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்ட அமெரிக்க போர்க்கப்பல்
அமெரிக்க கடற்படையின் ‘“USS கென்பெரா (டLCS 30)” போர்க்கப்பல், வழக்கமான துறைமுக விஜயத்தின் ஒரு பகுதியாக இன்றைய தினம்(26.10.2026) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இது, இந்த ஆண்டின் இலங்கைக்கு வந்த இரண்டவாது கப்பலாகவும் பார்க்கப்படுகின்றது.
“இன்டிபென்டன்ஸ்” வகையைச் சேர்ந்த இந்த போர்க்கப்பல், இதற்கு முன்னர் கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு வருகை தந்திருந்தது.
இலங்கை வரும் அமெரிக்க போர்க்கப்பல்
கப்பலின் வருகை மற்றும் அதற்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்புகளுக்காக இலங்கை கடற்படைக்கு அமெரிக்க தூதர் எரிக் மேயர் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

அலபாமா மாநிலத்தில் உள்ள மொபைல் நகரில் கட்டப்பட்ட “USS கேன்பெரா”, கடற்கரையோரப் பகுதிகள் மற்றும் திறந்த வெளிக்கடல்களில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தகவமைப்பு பணி அமைப்புகளைக் கொண்ட இந்த போர்க்கப்பல், கடல்சார் பாதுகாப்பு செயல்பாடுகள், கடல் கண்ணிவெடிகளை அகற்றுதல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படையின் பிரசன்னத்தை வலுப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றது.
வெளிநாட்டில் இருக்கேன், சொல்லாம போறீங்களே அப்பா.. செஃப் தாமு மறைவால் கண்ணீர் விட்டு கதறும் புகழ் Cineulagam
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri