இலங்கையில் இணையம் ஊடாக காதல் செய்வோருக்கு அவசர எச்சரிக்கை
இலங்கையில் ஒன்லைன் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி நண்பர்களை அறிமுகம் செய்து கொள்ளும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மைய காலத்தில் ஒன்லைன் ஊடாக நட்பு, காதல் அல்லது டேட்டிங் செயலிகள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி பண மோசடிகளில் ஈடுபடும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் குறுகிய காலத்திலோ அல்லது நீண்ட காலத்திலோ கவர்ச்சிகரமான முறையில் குறுந்தகவல்களை அனுப்பி நபர்களை ஏமாற்றி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தள மோசடி
ஒன்லைன் ஊடாக பாலியல் சேவைகளை வழங்குவதாகவும், நட்புறவை பேண முடியும் என்றும் கூறி சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்புகொண்டு, விசேட செயலியை பதிவிறக்கம் செய்ய தூண்டுவதாகவும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் செயலியானது பாதிக்கப்பட்ட நபரின் தொலைபேசியில் இருக்கும் வரை, அவர் மேற்கொள்ளும் ஒன்லைன் ஊடாக பணம் செலுத்துவது தொடர்பான கணக்கு விபரங்களை இந்த மோசடி நபர்கள் பெற்றுக் கொள்கின்றனர்.
அத்துடன், அதன் மூலம் கணக்குகளிலுள்ள பணத்தை மோசடியாக எடுத்துக்கொள்வதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, எக்காரணம் கொண்டும் அடையாளம் தெரியாத செயலிகளை பதிவிறக்கம் செய்யக் கூடாது என குறிப்பிட்டுள்ளனர்.
அந்நிய நபர்களுக்கு வங்கி விபரங்கள், OTP அல்லது கடவுச்சொற்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்கள், புகைப்படங்கள் அல்லது காணொளிகளை வழங்கக் கூடாது என பொலிஸார் கடுமையாக வலியுறுத்தியுள்ளனர்.
வெளிநாட்டில் இருக்கேன், சொல்லாம போறீங்களே அப்பா.. செஃப் தாமு மறைவால் கண்ணீர் விட்டு கதறும் புகழ் Cineulagam
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam