நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்வெட்டுக்கு காரணம் வெளியானது
நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்வெட்டுக்கு தொழில்நுட்பக்கோளாறே காரணம் என தேசிய அமைப்பு செயல்பாட்டு மையம் (NSOC) தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி (சனிக்கிழமை) நாடு முழுவதும் திடீர் மின்தடை ஏற்பட்டது.
நாடு முழுவதும் மின்வெட்டு
நண்பகல் 11:43 மணியளவில் மின்தடை ஏற்பட்ட நிலையில், மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர பொறியாளர்கள் சுமார் 6 முதல் 11 மணித்தியாலங்கள் போராடி அன்றைய தினம் மாலை 6.00 மணியளவில் படிப்படியாக மின்சாரம் மீள வழங்கப்பட்டது.

இந்நிலையில், கோத்மலை நீர்மின் நிலையம் அல்லது வேறு எங்கோ ஏற்பட்ட திடீர் செயலிழப்பால், அமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மையின் காரணமாக நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் உள்ள மின்னாக்கிகளில் ஒன்று தானாகவே நின்றுவிட்டதாகவும், இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க NSOC தவறியதே நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட காரணம் என்றும் தகவல் கிடைத்துள்ளதாக எரிசக்தி அமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மற்றும் பிரதான நீர்மின் நிலையங்களிலிருந்து முறையே 577.1 மெகாவாட் மற்றும் 477.2 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தேசிய அமைப்பு செயல்பாட்டு மையம் இந்த நிலைமையை விசாரிக்க ஒரு உள் விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், அதன் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கிரக மாற்றங்களால் நவம்பரில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan