ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்..
அமெரிக்கப் படைகள் ஈரானின் முக்கியமான மூன்று அணு ஆயுத தளங்களை அழித்த பிறகு, ஈரான் மீண்டும் இஸ்ரேலை நோக்கி தாக்குதலை நடத்தியுள்ளது.
ஹைஃபா மற்றும் தெல் அவிவ் நகரங்களை நோக்கி இரண்டு கட்டங்களாக 27 ஏவுகணைகள ஏவியதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
ஈரானின் தாக்குதல்
இந்த தாக்குதலில் குறைந்தது 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.
🚨Sirens sounding across Israel due to another Iranian missile launch🚨
— Israel Defense Forces (@IDF) June 22, 2025
தெல் அவிவுக்கு அருகில் உள்ள பென் குரியன் விமான நிலையமும் ஈரானின் இலக்காக இருந்தது என ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.
"ஈரானின் ஏவுகணை தாக்குதல் காரணமாக இஸ்ரேல் முழுவதும் அலாரம் ஒலிக்கிறது" என இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) “X” தளத்தில் பதிவிட்டுள்ளது.
ஈரானின் இந்த புதிய தாக்குதல், முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த அதிரடியான அறிவிப்புக்கு பிறகு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கா தாக்குதல்
டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் நான்ஸ், இஸ்பஹான் மற்றும் போர்டோவ் ஆகிய அணுஆயுத தளங்கள் மீது அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடத்தியதாக நேற்றையதினம் தெரிவித்துள்ளார்.

"இந்த தாக்குதல் ஒரு அதிசயமான இராணுவ வெற்றியாகும். ஈரானின் முக்கிய அணுஅமில வாயுநிரப்பு மையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன" என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இல்லையெனில், எதிர்கால தாக்குதல்கள் இன்னும் பெரியதாகவும், எளிதாகவும் இருக்கும்" எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் அணுஆயுத மையங்களை அழித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாராட்டு தெரிவித்துள்ளார்.
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri