போர்பதற்றத்திற்கு மத்தியில் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ள வடகொரியா
மத்தியக்கிழக்கில் போர்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரானுக்கு வட கொரியா ஆதரவு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
KCNA எனப்படும் வடகொரிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
இன்று உலகம் காணும் நிகழ்வுகள், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளால் ஆதரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் இஸ்ரேல், இஸ்ரேல் மத்திய கிழக்கின் அமைதியை பாதித்த புற்றுநோய்.. ஈரானுக்கு வட கொரியா ஆதரவு என்பதையும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை அழிப்பதில் முக்கிய குற்றவாளி என்பதையும் தெளிவாக நிரூபிக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வட கொரிய ஆதரவு
மத்திய கிழக்கில் முழுமையான போரின் அபாயத்தை இஸ்ரேல் அதிகரித்து வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத்திய ஆசியாவில் ஒரு புதிய போரை கொண்டு வந்த சியோனிஸ்டுகளும், அவர்களை ஆர்வத்துடன் பாதுகாத்து ஆதரிக்கும் பின்கதவு சக்திகளும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அழிப்பதற்கு முழுப் பொறுப்பாவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிரான வடகொரியாவின் அறிக்கை, ஈரானுடனான அதன் நெருங்கிய உறவைப் பிரதிபலிக்கிறது.
ஈரானும் வடகொரியாவும் 1973 முதல் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன.
ஈரானை போல வடகொரியாவும் அதன் ஆயுதங்கள் மற்றும் அணுசக்தித் திட்டங்கள் காரணமாக அமெரிக்கா மேற்கு நாடுகளால் தொடர்ந்து தடைகளுக்கு இலக்காகி வரும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam
