அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் : எச்சரிக்கும் ஈரான்
ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் மூர்க்கத்தனமானவை என்றும் இது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்க தெஹ்ரான் அனைத்து விருப்பங்களையும் கொண்டுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பின்னர், ஈரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதைக் கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளன.
ஜோர்தானுடனான தரைவழிப் போக்குவரத்து
சிறிது நேரத்திற்கு முன்பு, ஈரானில் இருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் முழுவதும் பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்தன என்று ஐ.டி.எஃப் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் சில பகுதிகளில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சம் அடையுமாறு குடியிருப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் தனது வான்வெளியை மூடிவிட்டதாக இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் முன்னதாக ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது,
இருப்பினும் எகிப்து மற்றும் ஜோர்தானுடனான தரைவழிப் போக்குவரத்து வழக்கம் போல் இயங்குகிறது. இஸ்ரேலின் வான்வெளி நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் மூடப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் விமான நிறுவனங்களுடன் புதுப்பித்த நிலையில் இருக்க வேண்டும். சினாய் மற்றும் ஜோர்தானுக்கான தரைவழி கடவைகள் வழக்கம் போல் இயங்குகின்றன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 23 மணி நேரம் முன்

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
