எதிர்கால ஜனாதிபதிக்கு விமான நிலையத்தின் காணி : நாடாளுமன்றத்தில் கசிந்த தகவல்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்(Bandaranaike International Airport) அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு விமான எரிபொருள் சேமிப்பு நிலையத்தை இயக்குவதற்கு அரசாங்கம் காணியொன்றை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜெட் எரிபொருள் விநியோகம் நாட்டிற்கு டொலர்களை ஈட்டித் தரும் பிரதான ஆதாரமாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் இன்று(08.05.2024) தெரிவித்த அவர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், அதன் ஏகபோக உரிமையை ஏன் இழக்கின்றது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
51 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
விமானங்களுக்கு எரிபொருளை வழங்கும் நோக்கத்திற்காக 51 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில், விமான நிலையத்தில் ஒரு அமைப்பு இருக்கும்போது, ஜெட் எரிபொருளை வழங்குவதற்காக, Cannel (Private) Limited மற்றும் Fits Aviation நிறுவனங்களுக்கு, பெற்றோலியக் கூட்டுத்தானபம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரை வெளியிடுமாறு சபைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த அவரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில் அரசாங்கத்திடம் இருந்து காணியைப் பெற்றுள்ள குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு வர்த்தகர் என்றும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்பார்க்கப்படுவதாகவும் சூசகமாக தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam
