புத்தர் என்ன சிங்களவரா..! இலங்கையில் பரப்பப்படும் இனவாதம் : எடுத்துரைக்கும் தமிழ் தேரர்
கௌதம புத்தர் சிங்களவர் இல்லை எனவும் பௌத்த மதத்திற்குள் சிங்கள பௌத்தம் என்ற இனவாதத்தை கொண்டுவருவது தவறு என தமிழ் துறவியான ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கை நாட்டிலே தமிழர்களுக்காக பேசுவதற்கும் தமிழர்களுக்கு தலைமைத்துவத்தைக் கொடுப்பதற்கும் காவி உடைகள் தயாராக உள்ளன.
தமிழர்களுக்கு தலைமைத்துவத்தை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம். இதற்கு தமிழ் தலைவர்கள் எங்களிடத்திலும் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு தமது அடுத்தடுத்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
ஆனால், தமிழர்களுக்கு தலைமைத்துவத்தை கொடுக்க வேண்டும் என எண்ணுபவர்கள் ஏன் எங்களிடத்திலே ஆலோசனைகளைப் பெற தயங்குகிறார்கள் எனத் தெரியவில்லை.
இதில் ஒரு விடயம் வெளிப்படையாகத் தெரிகின்றது. அது என்னவென்றால் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டால் தீர்வு வந்துவிடும். தீர்வு வந்து விட்டால் முக்கியமாக அரசியல் பேச முடியாது போய்விடும்” என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

முடிவுக்கு வரப்போகும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சன் டிவியின் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
