விமான பாதுகாப்பில் கவனம் செலுத்துவது தொடர்பில் இலங்கையின் உறுதி
சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி, எப்போதும் விமான பாதுகாப்பின் மிக உயர்ந்த தரத்தை பராமரிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.
சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் சாகர கொட்டகதெனிய இதனை தெரிவித்துள்ளார்.
விமான விபத்துக்கள்
உலகின் வேறு இடங்களில் விமான விபத்துக்கள் ஏற்பட்டாலும், விமானத் தகுதித் தரங்களை பராமரிப்பது தொடர்ச்சியான நடைமுறையாகும்.
இந்த நிலையில், இலங்கை விமான போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு தரத்தை தொடர்ந்து பராமரித்து வருவதாக கொட்டகதெனிய கூறியுள்ளார்.
இந்தியாவில் 240க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட விமான விபத்து குறித்து கருத்து தெரிவிப்பது, தற்போது பொருத்தமல்ல என்று கூறிய அவர், அதற்கான காரணம் நிறுவப்பட்டதும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிச்சயம் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
