அதிமுகவுடன் தவெக கூட்டணியா..! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முடிவு
தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் விஷயத்தில் சுமுகத் தீர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அதிமுகவின் லால்குடி எம்.எல்.ஏ லீமா ரோஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
அதிமுகவுடன் பேச்சுவார்த்தை
அதாவது, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மை என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றால், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாதியான 117 தொகுதிகளைவிட ஒன்று கூடுதலாக இருக்க வேண்டும்.

அதாவது, 118 தொகுதிகள் வேண்டும். த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால், அதில் திருச்சி கிழக்கு தொகுதியை அவர் பதவி விலகுவார் என கூறப்படுகின்றது.
மேலும், பெரும்பான்மை வாக்கெடுப்பை நடத்த த.வெ.க.வில் இருந்து ஒருவர் தற்காலிக சபாநாயகராக இருக்க நேரிடும் என்பதால், அவரால் ஓட்டுபோட முடியாது.
எனவே, த.வெ.க. ஆட்சியமைக்க இன்னும் 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்தநிலையில், பெரும்பான்மை இல்லாத நிலையில் முறையான அரசு அமைக்க விஜய் முனைப்பு காட்டி உள்ளார்.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு தவெகவினர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் விஷயத்தில் சுமுகத் தீர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அதிமுகவின் லால்குடி எம்.எல்.ஏ லீமா ரோஸ் கூறியுள்ளார்.
ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினரும் அதிமுக எல்.ஏ.-வுமான லீமா ரோஸ் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் அதிசயத் தேர்தல்! தவெக தலைவர் விஜய் சற்றுமுன்னர் வெளியிட்ட பதிவு
காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் என சொன்ன ரஜினி.. இப்போது விஜய் பற்றி போட்ட பதிவை பாருங்க Cineulagam
3 எம்.எல்.ஏக்கள் ஒரே குடும்பத்தில்.,அரசியலில் கால்பதிக்கும் லாட்டரி மார்டின் குடும்பம் News Lankasri