விமானத்துடன் சேர்ந்து சுக்குநூறாகி போன ஒரு குடும்பத்தின் கனவு..!
பிரதிக் ஜோஷி என்ற மென்பொருள் நிபுணரின் குடும்பத்தினர், வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்க லண்டனுக்கு புறப்பட்ட போது, விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
பிரதிக் ஜோஷி ஆறு வருடங்களாக லண்டனில் வசித்து வந்தார்.
தனது மனைவி மற்றும் மூன்று இளம் குழந்தைகளுக்கு லண்டனில் ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நீண்டகாலமாக அவருக்கு ஒரு விருப்பம் இருந்துள்ளது.
பல வருடங்களாக உரிய அனுமதிகளுக்காக காத்திருந்த பிறகு, அவரது குடும்பத்தினர் லண்டனில் வசிப்பதற்கான அனுமதியை பெற்றுள்ளனர்.
நொறுங்கிப்போன கனவு
இரண்டு நாட்களுக்கு முன்பு, பிரதிக் ஜோஷியின் மனைவி கோமி வியாஸ், லண்டனுக்கு புறப்படுவதற்காக தனது மருத்துவ பதவியில் இருந்து விலகினார்.
இதனையடுத்து, நேற்றையதினம்(12) ஏர் இந்தியா விமானத்தில் அவர்கள் ஏறி ஒரு புகைப்படம் எடுத்து அதனை மகிழ்ச்சியாக உறவினர்களிடம் பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.
எனினும், துரதிஷ்டவசமாக விமானம் விபத்துக்குள்ளானதில் அவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
லண்டனில் புதிய வாழ்கையை ஆரம்பிக்க வேண்டும் என்ற அவர்களது கனவு விமானத்துடன் சேர்ந்தே நொறுங்கிப்போனது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
