அம்பாறையில் எரிபொருள் நிலையங்களுக்கு படையெடுக்கும் மக்கள் (Photos)
அம்பாறை - கல்முனை, சாய்ந்தமருது மற்றும் மருதமுனை உள்ளிட்ட பகுதிகளில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு மீண்டும் மக்கள் முண்டியடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இரவு முதல் பெட்ரோலை பெறுவதற்கு மக்கள் எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தந்தவண்ணம் உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் கியூ.ஆர் அட்டை முறைமையினால் சீராக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விநியோகம் திடீரென சிக்கல் நிலைமையை அடைந்ததையடுத்து இவ்வாறு மக்கள் முண்டியடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு
இதேவேளை மக்கள் சில நாட்களாக எரிபொருள் நிலையத்தை சூழ்ந்து நிற்பதையும், அதிகளவான வாகனங்கள் எரிபொருள் நிலையங்களை நாடி செல்வதையும் காண முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.