இலங்கை கிரிக்கெட்டுக்கு மோசமான ஆண்டு - 29 ஆண்டுகளில் பின்னடைவு
இலங்கை கிரிக்கெட் அணி 2026 ஆம் ஆண்டில் கடும் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் தொடர்ச்சியாக 8 சர்வதேச தொடர்கள் மற்றும் போட்டிகளில் பட்டம் வெல்ல தவறியுள்ளதுடன், இந்த ஆண்டில் ஒரு டெஸ்ட் வெற்றியை கூட பதிவு செய்யவில்லை.
போட்டிகளில் தோல்வி
2026 இல் இலங்கை அணி விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில் 3 தோல்வியுடன், 3 போட்டிகளை சமநிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளது.
1997ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக, ஒரு வருடத்தில் டெஸ்ட் வெற்றி ஒன்றையும் இலங்கையால் பெற முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஐசிசி தரவரிசையில் டெஸ்டில் 9ஆவது இடத்திற்கும், ஒருநாள் போட்டிகளில் 8ஆவது இடத்திற்கும், T20 போட்டிகளில் 9ஆவது இடத்திற்கும் இலங்கை அணி சரிந்துள்ளது.
ராவல்பிண்டியில் இன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்டில் 8 விக்கெட்டுகளால் தோல்வியடைந்த இலங்கை, டெஸ்ட் தொடரையும் 1-0 என இழந்தது.
இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க புதிய பயிற்சி
கேரி கிறிஸ்டன் 2026 ஏப்ரலில் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பின்னர், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டுமே இலங்கை வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், இலங்கை அணி, டிசம்பரில் இந்தியாவுக்கும், 2027 ஜனவரி–பெப்ரவரியில் நியூசிலாந்துக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன், தென்னாபிரிக்க அணியையும், அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ளவுள்ளது.
2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்த இலங்கை அணி, தற்போது மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
தொடர்ந்து சரியும் இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க புதிய பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுவினர் என்ன செய்யப்போகிறார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்தோனேசியாவுக்கு அருகில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கைக்கு முக்கிய அறிவுறுத்தல்