முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை வீட்டிற்குள் நுழைந்து கொடூரமாக தாக்கிய வெளிநாட்டவர்
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் சீன நாட்டவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சீன பிரஜை தான் திருமணம் செய்துகொண்ட இலங்கை பெண்ணின் சகோதரரை சந்திப்பதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
சந்தேகநபரின் மைத்துனர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் நெருங்கிய நண்பர் என்றும், அவர் சில காலமாக அவரது வீட்டில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் சீன நாட்டவருக்கும் இடையே வீட்டிற்குள் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சீன நாட்டவரை மாலபே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது தாக்குதலுக்கு உள்ளான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கூறியதையடுத்து, பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு சட்டமூலம்! உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு