நெல்லியடியில் தடைகளை மீறி மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்
மாவீரர்நாள் வாரம் இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் நெல்லியடியில் கொட்டகை அமைக்கப்பட்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் (21) உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.
மாவீரர் நினைவேந்தல் கொட்டகை அமைக்க பொலிஸார் தடையேற்படுத்தியிருந்த நிலையில், தடைகளை மீறி மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது.
ஏற்பாட்டு குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம்
நெல்லியடி நகரில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் நேற்று மாலை அமைக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் கொட்டகைகளை பொலிஸார் அகற்ற முற்பட்டபோது, ஏற்பாட்டு குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த ஐவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு கொட்டகைகளை அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியிலும், நெல்லியடி நகரில் நினைவேந்தல் கொட்டகை மீண்டும் அமைக்கப்பட்டு மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

