இந்தியாவில் ஊடக பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகையின் மரணம்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில், 33 வயதான மொடல் மற்றும் நடிகையான ட்விஷா சர்மா, சட்டத்தரணி சமர்த் சிங்குடன் திருமணமாகி வெறும் ஐந்து மாதங்களே ஆன நிலையில் கடந்த மே 12 அன்று அவரது வீட்டில் உயிரிழந்தார்.
இந்த மரணம் இந்தியாவில் பெரும் ஊடக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது கணவர் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதியான மாமியார் கிரிபாலா சிங் ஆகியோர் வரதட்சணை கேட்டு தங்களை சித்திரவதை செய்ததாகவும், இது திட்டமிட்ட கொலை என்றும் ட்விஷாவின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
CBIயிற்கு மாற்றம்..
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கிரிபாலா சிங், ட்விஷாவிற்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்றும் கூறி வருகிறார்.

மேலும், ஊடகங்களில் ட்விஷாவின் குணம் குறித்து அவர் அவதூறாகப் பேசியது பொதுமக்களிடையே பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி கிரிபாலா சிங்கிற்கு முன்பிணை கிடைத்துள்ள போதிலும், தலைமறைவாக உள்ள அவரது மகன் சமர்த் சிங்கின் பிணை மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அவரை மே 23க்குள் சரணடைய உத்தரவிட்டுள்ளது.
முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தூக்கிட்டதால் மரணம் என்று குறிப்பிட்டாலும், உடம்பில் காயங்கள் இருந்ததாகக் கூறியதால், குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளது.
உள்ளூர் பொலிஸார் ஆரம்பத்தில் இது உயிர்மாய்ப்பு என்று கூறி வழக்கை முடிவுக்குக் கொண்டு வர முயன்றதாகப் முறைப்பாடு எழுந்ததை அடுத்து, மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் இந்த வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பிற்கு (CBI) மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri