இலங்கைக்கு FBI புலனாய்வுக்குழு வந்துள்ளதாக வெளியான தகவல்! அமெரிக்கத்தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இலங்கையில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு ஆதரவளிக்க அமெரிக்க கூட்டாட்சி புலனாய்வு அமைப்பான FBI-யின் விசேட “குழு” ஒன்று இலங்கைக்கு வந்துள்ளதாக வெளியான தகவல்களை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றினை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது.
பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்
அண்மையில் சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களில், இலங்கையில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்காக அமெரிக்க FBI குழு நேரடியாக வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் தூதரகம் விளக்கமளித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்காக எந்தவொரு FBI விசாரணைக்குழுவும் இலங்கைக்கு அனுப்பப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், பல நாடுகளில் உள்ள நடைமுறைகளை போலவே, இலங்கையிலும் அமெரிக்க தூதரகத்தின் கீழ் FBI Legal Attaché அதிகாரி ஒருவர் பணியாற்றி வருவதாகவும், அவர் தேவையான சந்தர்ப்பங்களில் இலங்கை சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் அறிவித்துள்ளது.
மேலும், விசாரணைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் துல்லியமான தகவல்களை வெளியிடுவது மிகவும் முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோல், தவறான தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam