புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக நிதிக்குற்றவியல் பிரிவில் முறைப்பாடு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் தமிழரசு கட்சியின் பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலனுக்கு எதிராக நிதிக்குற்றவியல் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட வி.பி.பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபர் தெ.இந்திரதாஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று (22.05.2026) முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தில் அவர் மேற்கொண்ட ஊடக சந்திப்பின் போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களுக்கு சேவை நோக்குடன் இயங்கிய வி.பி.பவுண்டேசன் என்ற அமைப்பில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அந்த அமைப்பினை கையகப்படுத்தி தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் தனியாக இயக்கிக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதி முறைக்கேடு..
அவர், "2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வி.பி.பவுண்டேசன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் உயிரிழப்பவர்களை காவிச்செல்வதற்காக இலவச அமரர் ஊர்தி சேவையினையும், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாங்குளம் போன்ற பிரதேசங்களில் பெண்களை கொண்ட சிறு குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களின் கூட்டுறவுக்காக ஒருதொகுதி பணம் கொடுத்து சுழற்சி முறையில் அறவிட்டு அதனை மீண்டும் அவர்களிடம் கொண்டு செல்லும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பபட்டு வருகின்றது.

கடந்த 2024 ஆம் ஆண்டு வரை அதன் இஸ்தாபகரான இந்திரதாஸின் வங்கி கணக்கு ஊடாகவே பணம் வைப்பிலிடப்பட்டு குழுக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் அமைப்பில் பண மேசடி நடைபெற்றுள்ளது அதனை விசாரணைக்கு எடுக்கும் போது தற்போது உள்ள புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் அமைப்பினை உடைத்து தான் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றுள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
இனியும் மக்களின் காணிகளை இராணுவம் வைத்திருப்பதற்கு எந்த நியாயமும் கிடையாது - மயிலிட்டியில் போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam