ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
அனுராதபுரத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் மோதுண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் நாவுல, கனுமுலய பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான டி.எம்.திலகரத்ன பண்டா (67) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மாத்தளை பிரதேசத்திற்கு அருகில் நேற்று(11.02.2024) ஏ-9 பிரதான வீதியை நோக்கி வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தானது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்குளுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், மோட்டார் சைக்கிளின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
