2023ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான அறிவிப்பு
2023ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பாடசாலைகளை அனுமதிப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 06இற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான மேன்முறையீடுகள் நாளை (13.02.2024) முதல் ஏற்றுக்கொள்ளப்படும்.
2024 பெப்ரவரி 13 முதல் 29 வரை ஒன்லைன் முறை மூலம் மேல்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இணையத்தள முகவரி
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk ஊடாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மூலம் அதிகபட்சமாக மூன்று பாடசாலைகளுக்கு மேல்முறையீடு செய்யலாம்.
http://g6application.moe.gov.lk/#/ என்ற இணையத்தளத்தின் ஊடாக நேரடியாக முறையீடுகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
