நீதிமன்ற தீர்ப்பால் நடுக்கத்தில் மைத்திரி..! சிறையில் ஹேமசிறி - பூஜித்தவின் இறுதி காலங்கள்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பாகவும் தற்போது நாட்டினுடைய பேசு பொருளாகவும் இந்த விடயம் மாறியுள்ளது.
கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்படுகின்ற தீர்ப்புக்கள், குற்றம் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் குற்றம் செய்வதற்கு சிந்திப்பவர்கள் அந்த விடயங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு திருந்த வேண்டும் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டமைந்தனவாக காணப்படுகின்றன. அதனடிப்படையிலே இந்தத் தீர்ப்பானது இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நீதிமன்றத்தினால் இறுதியாக தனது கருத்துக்களை தெரிவிப்பதற்காக பூஜித ஜயசுந்தரவிற்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தின் போது, ”புலனாய்வு தகவல்கள் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன என்னிடம் கூறினார்” என தெரிவித்திருந்தார்.
அதேபோன்று ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு வழங்கப்பட்ட இறுதி சந்தர்ப்பத்தின் போது, ” நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் பலவற்றுடன் நான் உடன்படவில்லை.
என்னால் அவற்றை ஏற்க முடியாது. ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் என்னால் ஒன்றும் செய்ய முடியாது ” என தனது தளம்பலான குரலில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டமைக்கு பின்னால் இருக்கக்கூடிய பல முக்கிய தகவல்கள் தொடர்பாக செய்திகளுக்கு அப்பால் நிகழ்சியின் ஊடாக விரிவாக பார்க்கலாம்..