இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
கடந்த வருடத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக அதிகளவிலான பணம் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இறக்குமதி செலவினம் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வருடத்தின் மொத்த இறக்குமதி செலவினத்தில் 28 சதவீதமாகும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மரக்கறிகளை இறக்குமதி
அத்துடன்,நாட்டிற்கு பழங்கள் மற்றும் மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்காக 13,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மரக்கறி வகைகளுக்காக 11,658 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது.
அத்துடன் பழங்களின் இறக்குமதிக்காக 1,308 கோடி ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் இறக்குமதி
இதேவேளை, கடந்த வருடத்தில் எரிபொருள் இறக்குமதிக்காகவே அதிகளவிலான பணம் செலவிடப்பட்டுள்ளது.
அதற்காக மாத்திரம் 153,924 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த இறக்குமதி செலவினத்தில் 28 சதவீதமாகும்.
இதுதவிர, மருந்துப் பொருட்களின் இறக்குமதிக்காக 21,778 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிடப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |