மஹர சிறைச்சாலை பதற்றத்தின் பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள்..!
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையை தொடர்ந்து, ராகம பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அங்கு, பெல் 412 ரக விமானத்தையும் ஆளில்லா விமானத்தையும் பணியில் ஈடுபடுத்தி நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும், பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தின் போது 30இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
சிறையில் ஏற்பட்ட வன்முறையின் போது பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரை உள்ளே அனுமதிக்க மறுத்ததால் நிலைமை கைமீறியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதற்கிடையில், தற்போது மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது கழுகு பார்வை நிகழ்ச்சி,
மஹர சிறைச்சாலையில் பதற்றம்! ஒருவர் பலி - சிறைச்சாலைக்குள்ளிருந்து கேட்ட துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள்