இலங்கை வரலாற்றை கதிகலங்க செய்த பிரதம நீதியரசர் பத்மன் சூரசேன - கதி கலங்கும் தென்னிலங்கை
ஈஸ்டர் குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய முன்னாள் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிரதம நீதியரசர் பத்மன் சூரசேன உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மரண தண்டனை வழங்கி தீர்பளித்தது.
இந்த தீர்ப்பு வழங்கப்பட்டமையை தொடர்ந்து முன்னாள் எரிச்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில,
" பூஜித் மற்றும் ஹேமசிறி போன்று சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும். அவர்களை விட பெரிய தவறுகளை இவர்கள் செய்திருக்கிறார்கள்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதுவரையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் யார் யாருக்கு என்னென்ன தண்டனைகள் வழங்கப்படவுள்ளன என்பது தொடர்பில் மக்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான பல முக்கிய விடயங்களை நாட்டு நடப்பு நிகழ்ச்சியின் ஊடாக தெளிவாகவும் விரிவாகவும் பார்ப்போம்..