மாத்தறையில் நடந்த கோர விபத்து - சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்
மாத்தறை - அத்துரலிய பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று(17.06.2026) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 28 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், 70 வயது முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
28 வயது இளைஞர் உயிரிழப்பு
இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் ஒன்றைச் செலுத்திச் சென்ற அத்துரலிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, மற்றைய மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் வந்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், அப்பகுதி மக்களின் உதவியுடன் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரு மோட்டார் சைக்கிள்களும் அதிக வேகத்துடன் நேருக்கு நேர் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri