திருகோணமலையில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார்சைக்கிள் மோதி விபத்து
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவம் இன்று (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பேக்கரி உற்பத்தி பொருட்களை ஏற்றிக் கொண்டு காலை நேர வியாபாரத்திற்காக சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியும், மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
சிகிச்சைக்காக அனுமதி
இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவருமே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த திருகோணமலை போக்குவரத்து பொலிஸார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தியுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 18 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam