ஈரான் போர் பதற்றத்தின் மத்தியில் வளைகுடா நோக்கி செல்லும் USS George Washington கப்பல்

United States of America Iran Ship Strait of Hormuz
By Shadhu Shanker Aug 15, 2026 10:39 PM GMT
Report

அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) விமானம் தாங்கிக் கப்பலில் பணியாற்றும் மாலுமிகள் மற்றும் கடற்படையினர் நீண்டகால பணியமர்த்தலால் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, அவர்களுக்கு மாற்றாக யு.எஸ்.எஸ். ஜோர்ஜ் வோஷிங்டன் USS George Washington விமானம் தாங்கிக் கப்பல் மத்திய கிழக்கு நோக்கி அனுப்பப்படுகிறது.

USS Abraham Lincoln கப்பல் 260 நாட்கள் கடலில் - வெளியான அதிர்ச்சி தகவல்..!

USS Abraham Lincoln கப்பல் 260 நாட்கள் கடலில் - வெளியான அதிர்ச்சி தகவல்..!

260 நாட்களுக்கும் மேலாக கடலில்

USS Abraham Lincoln கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக கடலில் உள்ளது. சுமார் 200 நாட்களாக எந்த துறைமுகத்திலும் நிறுத்தப்படாமல் தொடர்ந்து பயணித்து வருகிறது. இந்த கப்பல் சுமார் 260 நாட்கள் தொடர்ச்சியாக கடலில் இருந்துள்ளது.

ஈரான் போர் பதற்றத்தின் மத்தியில் வளைகுடா நோக்கி செல்லும் USS George Washington கப்பல் | Uss George Washington Replace Uss Abraham Lincoln

இது அமெரிக்க கடற்படையில் கவலையை ஏற்படுத்தியுள்ள நீண்டகால பணியமர்த்தலாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க செனட்டர் ரிச்சர்ட் புளூமென்தால், பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத்திடம் கப்பலில் உள்ள நிலைமை குறித்து கடிதம் மூலம் கவலை தெரிவித்துள்ளார்.

அதில் அடிப்படை பொருட்களின் பற்றாக்குறை, குடிநீர் மாசுபாடு, கழிவறை மற்றும் குழாய் பிரச்சினைகள், மாலுமிகளின் மோசமடைந்து வரும் மனநலம், கப்பல் தள பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் தபால் சேவையில் ஏற்பட்ட இடையூறுகள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளன.

USS George Washington மத்திய கிழக்கு நோக்கி

இந்த நிலையில், USS George Washington கப்பல் ஏற்கனவே மத்திய கிழக்கு நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.

அது கடந்த வாரம் வியட்நாமின் Da Nang துறைமுகத்திலிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் போர் பதற்றத்தின் மத்தியில் வளைகுடா நோக்கி செல்லும் USS George Washington கப்பல் | Uss George Washington Replace Uss Abraham Lincoln

பின்னர் ஒரு க்ரூசர் மற்றும் ஒரு டிஸ்ட்ராயர் கப்பலுடன் Singapore Strait வழியாக பயணித்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க கடற்படை அதிகாரி ஒருவர், அந்த விமானம் தாங்கிக் கப்பல் தற்போது Malacca Strait பகுதியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அங்கிருந்து அது இந்தியப் பெருங்கடல் வழியாக மத்திய கிழக்கு நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The Wall Street Journal தகவலின்படி, மத்திய கிழக்கில் தற்போது பணியில் உள்ள அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களில் ஒன்றான USS Abraham Lincoln-க்கு பதிலாக USS George Washington களமிறக்கப்பட உள்ளது.

மாலுமிகள் கடுமையான அழுத்தத்தில்

நீண்டகால பணியமர்த்தல் மற்றும் தொடர்ந்து நீட்டிக்கப்படும் பணிக்காலம் காரணமாக மாலுமிகளின் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

Military Times வெளியிட்ட தகவலின்படி, சில மாலுமிகள் கப்பலில் இருந்து கடலில் குதிக்க முயன்றதாகவும் அல்லது அதுபற்றி சிந்தித்ததாகவும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஒரு மாலுமியின் மனைவி Annabelle Loma, தனது கணவர் பலமுறை பணிக்காலம் நீட்டிக்கப்பட்ட பின்னர் கப்பலில் இருந்து குதிக்க முயன்றதாக தெரிவித்துள்ளார்.

ஈரான் போர் பதற்றத்தின் மத்தியில் வளைகுடா நோக்கி செல்லும் USS George Washington கப்பல் | Uss George Washington Replace Uss Abraham Lincoln

அவர் கடுமையாக சோர்வடைந்திருந்ததாகவும், இந்த சம்பவம் தனது 13 ஆண்டுகால இராணுவப் பணியை பாதித்துவிடுமோ என்று அஞ்சியதாகவும் அவர் கூறினார்.

மற்றொரு சம்பவத்தில், கப்பலில் இருந்த ஒருவர் கடலில் குதிக்க முயன்ற சக மாலுமியை பிடித்து இழுத்து மீட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், ஈரானுடனான பதற்றம் நீடிக்கும் நிலையில், அமெரிக்க கடற்படை தனது பணிகளைத் தொடர்வதற்காக கப்பல்களை மாறி மாறி அனுப்பும் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் அதிரடி அறிவிப்பிற்கு ஈரானின் கடுமையான பதிலடி..!

ட்ரம்பின் அதிரடி அறிவிப்பிற்கு ஈரானின் கடுமையான பதிலடி..!

ஜப்பானை உலுக்கிய வரலாறு காணாத கனமழை: இதுவரையில் 8 பேர் பலி..

ஜப்பானை உலுக்கிய வரலாறு காணாத கனமழை: இதுவரையில் 8 பேர் பலி..

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US