செங்கடலில் நிலைகொள்ளவுள்ள இலங்கை கடற்படை
ஹெளதி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து சர்வதேச கப்பல்களை பாதுகாப்பதற்காக இலங்கையிலிருந்து கப்பலொன்று செங்கடல் பகுதிக்கு செல்லத் தயாராகவுள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளர் கயன்விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை சரக்குகப்பல்களை பாதுகாப்பதற்காக செங்கடல், அரபிக்கடல், ஏடன்வளைகுடா மற்றும் அதனை அண்டிய கடல்பாதையிலும் இந்த கப்பலைப் பயன்படுத்தவுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் கூறியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலை
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இலங்கை கடற்படை தனது கப்பல்களை அனுப்புகின்றது. எனினும் அதற்கான திகதியை இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புரொஸ்பெரிட்டி கார்டியன்ஸ் நடவடிக்கையின் கீழ் இலங்கை முதலில் ஒரு கப்பலை அனுப்பும் என தெரிவித்துள்ள கடற்படை பேச்சாளர் இது குறித்த கலந்துரையாடல் இடம்பெறும் கப்பலின் திறமையை அடிப்படையாக வைத்து அதனை பயன்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதைய தேவைகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மேலதிக கப்பல்களை செங்கடல் பகுதிக்கு அனுப்புவோம் எனவும் கடற்படை பேச்சாளர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |