சம்பந்தனுடன் நேரடியாக கதைக்க முடியாது இடைநடுவில் மகன்!! வெளியான உள் விவகாரம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தொடர்புகொள்வதில் பாரிய சிக்கல் நிலை காணப்படுவதாகவும், அவரது மகன் வேறுபட்ட பதில்களை வழங்குவதாகவும் தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
இரா. சம்பந்தனுடனான சந்திப்புக்கள் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கொண்டவாறு கூறினார்.
மேலும், “தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பதவிக்கு போட்டியிடும் இருவரும் எமது மாவட்டத்திற்கு வருகை தந்தனர்.
எமது கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் 30 பேருக்கும் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் மாவட்ட கிளை வாக்களிப்பு குறித்து யாரையும் கட்டுப்படுத்தவில்லை” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
