ஈரானியர்களின் சடலங்களை ஒப்படைக்க இலங்கை அரசு தயார் : ஈரான் அரசின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்காகக் காத்திருப்பு
இலங்கையின் கடல் எல்லைக்குள் நிலவும் தற்போதைய பதற்றமான சூழலில், நாடு ஒருபோதும் பக்கச்சார்பின்றி நடுநிலையான கொள்கையையே பின்பற்றி வருகின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
நேரடி கண்காணிப்பு..
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது இலங்கையின் பொறுப்பில் உயிரிழந்த 84 ஈரானியர்களின் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஈரான் அரசு இது குறித்து உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், அவற்றை உரிய முறையில் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசு தயாராக இருக்கின்றது.
அத்துடன், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 32 பேர் மற்றும் இரண்டாவது கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 206 கடற்படையினர் தற்போது இலங்கைக் கடற்படை மற்றும் வைத்தியசாலைகளின் நேரடி கண்காணிப்பில் உள்ளனர்.

சர்வதேச கடல்சார் உடன்படிக்கைகளின்படி, மேற்படி நபர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் வரை அவர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே பொறுப்பேற்கும்.
ஒரு பொறுப்புள்ள நாடு என்ற ரீதியில் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து நாம் செயற்பட்டு வருகின்றோம். இலங்கை கடல் எல்லையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான விவகாரங்களை அரசு மிகவும் அவதானமாகக் கையாண்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
கொடைக்கானலில் சக்தி போடும் ரொமான்டிக் பிளான், ஆனால்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam