நூலிழையில் தப்பிய அமெரிக்க விமானத்தளம் - ஈரானின் SU-24 போர் விமானத்தின் பாய்ச்சல்
மத்திய கிழக்கில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானினுடைய 2 விமானிகள் ஆபத்தான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை தற்போது வெளிவந்திருக்கிறது.
கட்டாரில் இருக்கக்கூடிய அல் உதெய் விமான நிலையத்தை நோக்கி மிகவும் தந்திரோபாயமான நடவடிக்கையை மேற்கொண்டிருந்த நிலையில் அது இறுதி நேரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2ஆம் திகதி அன்று ஈரானின் 2 விமானிகள் SU-24 போர் விமானத்தில் பயணித்துள்ளனர். குறித்த இரு விமானிகளும் சென்ற இடமானது 10,000இற்கும் அதிகமான அமெரிக்க துருப்புக்களைக் கொண்ட ஒரு விமானத்தளமாகும்.
இது உலகிலேயே மிகவும் பிரமாண்டமான ரேடர் அமைப்புக்களைக் கொண்ட அமெரிக்க தளமாகவே இருக்கின்றது.
இந்த தளத்தை ட்ரோன் மூலமாகவோ அல்லது ஏவுகணைத் தாக்குதல் மூலமாகவோ தகர்த்தல் என்பது அசாத்தியமானது என போரியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
ராஜினாமா செய்த ஜெயசூரியா: இந்தியாவிற்கு உலகக்கிண்ணத்தைப் பெற்று தந்தவரை நியமித்த இலங்கை News Lankasri