மயானத்திற்குள் வெள்ளை ஆடையுடன் திடீரென நுழைந்த மர்ம நபர்கள்.. வெளியான திடுக்கிடும் தகவல்
தெஹிவலயில் உள்ள பொது மயானம் ஒன்றில் காவலரை மோட்டார் சைக்கிளில் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் என குற்றம் சாட்டப்படும் குறித்த நபர், நுவகொடவில் உள்ள டெல்கந்த சந்திப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து 7,200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் கடத்தல்காரர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான திஸநாயக்க முதியன்செலகே அவிஷ்க ஹெஷான் என்றழைக்கப்படும் போதியா வட்டே அவிஷ்காவின் நெருங்கிய கூட்டாளி என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மயானத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் என்று நம்பப்படும் ஒருவரின் தந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்போது, வெள்ளை உடை, பாதுகாப்பு தலைக்கவசங்கள் அணிந்திருந்த இருவரில் ஒருவர் கால்நடையாக வந்து பலமுறை சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri