இளம் பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற பொலிஸ் அதிகாரி கைது
இரண்டு இளம் பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற ஹோமாகம சிரேஷ்ட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, மீகோட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரான அந்த பிரதம ஆய்வாளர், நேற்று முன்தினம் இரவு (25) இரண்டு இடங்களில் இந்த விபத்துக்களை ஏற்படுத்தியதாகத் கூறப்படுகின்றது.
தப்பிச் செல்ல முயற்சி..
பொலிஸ் தகவலின்படி, முதல் விபத்து ஹை லெவல் சாலையில் உள்ள மீகோட பெட்ரோல் நிலையம் அருகேயும், இரண்டாவது விபத்து வத்தரேக்க 20ஆவது தூண் பகுதியிலும் நிகழ்ந்துள்ளது.

சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி, நேற்று முன்தினம் இரவு 11.30 மணி முதல் 11.57 மணிக்குள் இந்த இரண்டு விபத்துக்களையும் நிகழ்த்தி, இளம் பெண்கள் மீது மோதிவிட்டு காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபரான பிரதம ஆய்வாளர் மதுபோதையில் காரை ஓட்டியது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.